Archives: மே 2020

சுலபமாகச் செய்கிறது

என்னுடைய தந்தையும் நானும் மரங்களை வெட்டவும், அவற்றைச் சரியான அளவில் துண்டுகளாக்கவும், இருவர் பயன் படுத்தை கூடிய, குறுக்கே வெட்டும் ரம்பத்தை பயன் படுத்துவோம். நான் இளைஞனாகவும், ஆற்றல் மிக்கவனாகவும் இருப்பதால் எளிதில் ரம்பத்தை வெட்டுக் குழியில் திணித்து விடுவேன். “எளிதாகச் செய்கின்றது, ரம்பம் அதன் வேலையை செய்யட்டும்” என்பார் என்னுடைய தந்தை.

பிலிப்பியருக்கு பவுல் எழுதிய வார்த்தைகளை நான் நினைத்துப் பார்த்தேன். “தேவனே…..செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராய் இருக்கிறார்” (2:13). எளிதாகச் செய்ய முடியும். அவர் நம்மை மாற்றுகின்ற வேலையை செய்யட்டும். கிறிஸ்து கூறியுள்ளவற்றை நாம் வாசிப்பதையும், செயல் படுத்துவதையும் காட்டிலும் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்று சி.எஸ். லுவிஸ் கூறியுள்ளார். “ ஓர் உண்மையான கிறிஸ்து என்ற நபர்,  உனக்குள் காரியங்களைச் செயல் படுத்தி,…… உன்னை நிரந்தரமாக ……கிறிஸ்துவைப் போல மாற்றி…… தன்னுடைய வல்லமையையும், மகிழ்ச்சியையும், அறிவையும்  நித்திய வாழ்வையும் பகிர்ந்து கொள்கின்றார்” என்று அவர் கூறுகின்றார்.

இத்தகையச் செயலைத் தான் தேவன் இன்று செயல் படித்திக் கொண்டிருக்கின்றார். இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவர் சொல்வதை கவனித்துக் செயல் படுத்து, ஜெபி. “தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்” (யூதா 1:21), நீங்கள் அவருக்கேச் சொந்தம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். அவர் உங்களை மாற்றுகின்றார் என்ற உறுதியில் அமைதியாக காத்திருங்கள்.

“நீதியின் மேல் பசியும் தாகமும் நமக்குள்ளதா?”  என்று கேட்டுக் கொள்ளுங்கள். ஒரு சிறு குழந்தை உயரத்தில் வைக்கப் பட்ட பரிசுப் பொருளை பெற்றுக் கொள்ளும்படி, அதன் கண்கள் ஆவலோடு மின்னுவதை உண்ர்ந்த அதன் தந்தை, அப்பரிசு பொருளை எடுத்து அக்குழந்தைக்கு கொடுப்பதைப் போல எண்ணிக்கொள்.

அது தேவனுடைய வேலை, மகிழ்ச்சி நம்முடையது. எளிதாகச் செய்யப்படும். ஒரு நாள் நாமும் அங்கிருப்போம்.

என்ன வேண்டுமானாலும் செய்

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலப் படத்தில், தன்னை மேதை என்று கூறிக்கொள்ளும் ஒருவர், கேமராவிற்கு முன்பாக நின்று கொண்டு, “ திகில், ஊழல், அறியாமை, வறுமை” ஆகியவை வாழ்க்கையை தேவனற்றதாகவும், அபத்தமாகவும் மாற்றுகிறது என்று மார்த்தட்டி பேசுகின்றார். நவீன திரைப்பட வசனங்களில் இது ஒன்றும் புதியதல்லவெனினும், இதில் ஆர்வத்தைத் தருவது என்னவென்றால், இது எங்கே கொண்டு செல்கிறது என்பதே. இறுதியில் முன்னணி நடிகர் பார்வையாளர்களை நோக்கி, எது உங்களுக்கு சிறிதேனும் மகிழ்ச்சியைத் தருகின்றதோ அதைச் செய்யுமாறு வருந்திக் கேட்கின்றார். அவனைப் பொருத்தமட்டில், பாரம்பரிய அறநெறியையும் விட்டு விடும்படி கேட்கின்றான்.

ஆனால், “என்ன வேண்டுமானாலும் செய்” என்பது சரிப்படுமா? பழைய ஏற்பாட்டிலுள்ள பிரசங்கியை எழுதியவர், வாழ்க்கையில் திகிலின் மத்தியில் விரக்தியைச் சந்தித்த அவர், இவ்வகை காரியத்தை அநேக ஆண்டுகளுக்கு முன்பே முயற்சித்திருக்கின்றார், உலக இன்பங்களின் வாயிலாக சந்தோஷத்தை தேடியிருக்கின்றார் (பிர.2:1,10). மிகச் சிறந்த கட்டுமான வேலைகள் (வ.4-6), செல்வம் (வ7-9), தத்துவங்களை ஆராய்தல் (வ12-16) என பல காரியங்களின் வாயிலாக தேடினார். அவருடைய தீர்வு என்ன? “எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது” (வ.17) என்கின்றார். இவை ஒன்றுமே மரணத்தையும், அழிவையும், அநியாயத்தையும் மேற்கொள்ளக் கூடியவையல்ல (5:13-17).

ஒரேயொரு காரியம் மட்டும் தான் பிரசங்கியை எழுதியோனை விரக்தியிலிருந்து மீட்டது. நம்முடைய வாழ்விலும், வேலையிலும் தேவன் பங்களிக்கும் போதுதான், நம்வாழ்வின் சோதனைகளின் மத்தியிலும் நிறைவைக் காணமுடியும். “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதும்………..தேவனுடைய கரத்திலிரு    ந்து வருகிறது” (2:24). வாழ்க்கை சில வேளைகளில் அர்த்தமற்றதாகத் தோன்றலாம், ஆனால், “உன் சிருஷ்டிகரை நினை” (12:1). வாழ்க்கையைக் கண்டுபிடிக்கும் படி உன் வாழ்நாளை வீணாக்காதே, “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக் கொள்” (வ.13).

தேவனை நம் வாழ்வின் மையமாக வைக்க வில்லையெனின், வாழ்வின் இன்பங்களும், துயரங்களும் ஏமாற்றத்தில் கொண்டு போய் விடும்.

நிலவைப் படைத்தவர்

விண்வெளி வீரர்கள், தங்களின் விண்வெளிக்கலத்தின் ஈஹிள் என்ற பகுதியை நிலவின் அமைதி கடல் பகுதியில் இறக்கிய போது, நீல் ஆம்ஸ்ராங், “மனிதன் எடுத்து வைக்கும் ஒரு சிறிய எட்டு, மனிதகுலத்திற்கு ஓர் இராட்சத எட்டு ஆகும்” என்றார். அவர் தான், நிலவில் நடந்த முதல் மனிதன் ஆவார்.  இவரைத் தொடர்ந்து மற்ற விண்வெளி வீரர்கள் நிலவில் காலடிவைத்தனர், அவர்களில் அப்பொல்லோவின் கமாண்டர் ஜெனி செர்னன் என்பவரும் ஒருவர். “நான் அங்கேயிரு   ந்தேன், பூமியே நீ அங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றாய், நான் வியப்பில் மூழ்கின்றேன், ……இது ஏதோ ஒரு விபத்தில் ஏற்பட்டதாக இருக்க முடியாது, அது எத்தனை அழகாக இருக்கின்றது!” என்று செர்னன் கூறினார். மேலும், “ உன்னையும், என்னையும் காட்டிலும் பெரியவர் ஒருவர் இருக்க வேண்டும்” என்றார். ஆழமான வழிமண்டலத்திலிருந்து அவர்கள் கண்ட விசித்திரமான காட்சி, அவர்களைச் சிந்திக்க வைத்தது, பரந்து விரிந்த அண்டத்தின் அளவைப் பார்க்கும் போது, தாங்கள் எத்தனை சிறியவர்கள் என்பதை உணர்ந்தனர்.

இந்த பூமியையும் அதற்கும் மேலானவற்றையும் படைத்து, அவற்றைக் காத்து வருகின்ற தேவனுடைய மிகப் பெரிய தன்மையை வியந்து காண்கின்றார் எரேமியா தீர்க்க தரிசி. இவையெல்லாவற்றையும் படைத்தவர், தன்னுடைய ஜனங்களுக்கு அன்பையும், மன்னிப்பையும், நம்பிக்கையையும் வழங்கி, தன்னுடைய நெருக்கத்தை நமக்கு காண்பிக்கின்றார் (எரே.31:33-34). “சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும், சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவர்” (வ.35), நம்மைப் படைத்தவர், சர்வ வல்ல தேவன், தம்முடைய படைப்புகள் எல்லாவற்றையும் ஆளுகை செய்கின்றார், அவர் தன்னுடைய ஜனங்களை மீட்டுக் கொள்ள கிரியை செய்கின்றார் (வச. 36-37).

மேலே இருக்கின்ற வானங்களை அளக்கவும், கீழே இருக்கின்ற பூமியின் அஸ்திபாரங்களை ஆராயவும் நம்மால் ஒரு போதும் கூடாது. ஆனால் நாம் இந்த உலகத்தின் விரிந்த தன்மையை பார்த்து வியந்து, இவை எல்லாவற்றையும், நிலவையும் படைத்த தேவனை வியப்போடு பார்ப்போம்.

நன்கு அளக்கப் பட்டது

ஸ்டெல்லா, ஒரு நாள், ஒரு பெட்ரோல் நிரப்பும் மையத்தில் ஒரு பெண்ணைச் சந்திக்கின்றாள், அவள் தன்னுடைய வீட்டில் வங்கி அட்டையை விட்டு விட்டு வந்திருந்தாள். தன்னுடைய குழந்தையோடு, தனித்து விடப்பட்டவளாய், அங்கு வருபவர்களிடம் உதவி கேட்டாள். அந்நேரத்தில் வேலையில் இல்லாதிருந்தும், ஸ்டெல்லா அவளுக்கு ரூபாய் 500 செலவளித்தாள், அறிமுகமில்லாத அப்பெண்ணுடைய வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்ப உதவினாள். அநேக நாட்களுக்குப் பின், அவள் வீட்டிற்குத் திரும்பிய போது, ஒரு பரிசுக் கூடையில் சிறுவருக்கான விளையாட்டுப் பொருட்களும், மற்றும் சில பொருட்களும் அவளுடைய வீட்டின் தாள்வாரத்தில் காத்திருந்தது. அந்த அறியாத நபரின் நண்பர்கள், ஸ்டெல்லாவின் இரக்கத்தை, மறக்கமுடியாத கிறிஸ்மஸ் பரிசுகளின் மூலம், அவளுடைய 500 ரூபாயை ஆசிர்வாதமாக மாற்றியுள்ளனர்.

இருதயத்தை மகிழ்விக்கும் இந்த கதை, இயேசு கூறிய, “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப் படும்” (லூக். 6:38) என்ற வார்த்தைகளை நினைவு படுத்துகின்றது.

இதைக் கேட்கும் போது, நமக்கும் கொடுக்கும் போது என்ன கிடைக்கும் என்பதில் கவனம் செலுத்த தோன்றும், ஆனால் அப்படிச் செய்யும் போது, நாம் கொடுத்தலின் உண்மையை இழந்து விடுவோம். இயேசு இந்த வார்த்தைகளைக் கூறுவதற்கு முன்பு, “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மை செய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாய் இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே” (வ.35) என்று கூறியுள்ளார்.

நாம் பொருட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக கொடுப்பதில்லை; நாம் கொடுக்கின்றோம், ஏனெனில், தேவன் நம்முடைய தாராள ஈகையில் பிரியமாயிருக்கின்றார். நாம் பிறர்மேல் செலுத்தும் அன்பு, தேவன் நம்மீது வைத்திருக்கும் அன்பைக் காட்டுகின்றது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றல்

ஜூம் செயலி பிரேத்யேகமான தகவல்தொடர்பு கருவியாக மாறுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு செயல்திட்டத்தைப் பற்றி விவாதிக்கக் காணொளி அழைப்பில் தன்னுடன் இணையுமாறு ஒரு தோழி என்னிடம் கேட்டாள். செய்வதறியாமல் நான் குழப்பமடைந்துள்ளேன் என்று மின்னஞ்சல்கள் வாயிலாக உணர்ந்துகொண்டாள். எனவே காணொளி அழைப்பை எவ்வாறு அமைப்பது என்பதைக் கண்டறிய எனக்கு உதவ ஒரு வாலிபரை அணுகும்படி அவள் பரிந்துரைத்தாள்.

அவளது ஆலோசனை, தலைமுறைகளுக்கு இடையிலான உறவுகளின் மதிப்பைச் சுட்டிக்காட்டுகிறது. இது ரூத் மற்றும் நகோமியின் கதையில் தெளிவாகும் ஒன்று. ரூத் ஒரு விசுவாசமான மருமகளென்று அடிக்கடி புகழப்படுகிறாள்.நகோமியுடன் பெத்லகேமுக்குத் திரும்பிச் செல்ல தன் ஊரை விட்டு வெளியேற முடிவு செய்தாள் (ரூத் 1:16-17). அவர்கள் நகரை அடைந்தபோது நகோமியின் இளைய மருமகள், “நான் வயல்வெளிக்குப் போய்.. (நமக்காக) கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன்” (2:2) என்றாள். இவள் முதியவளுக்கு உதவினாள், அவள் இளையவளுக்கு போவாஸை திருமணம் செய்ய உதவினாள். நவோமி ரூத்துக்கு கொடுத்த ஆலோசனை, போவாஸை இறந்துபோன திருமண உறவுகளின் ஆஸ்தியை வாங்குவதற்கும், ரூத்தை”மனைவியாக” கொள்ளவும் செயல்படத் தூண்டியது (4:9-10).

இளைய தலைமுறையினருடன் தங்கள் அனுபவமிக்க ஞானத்தைப் பகிர்ந்துகொள்பவர்களின் அறிவுரைகளை நாம் நிச்சயமாக மதிக்கிறோம். ஆனால் ரூத் மற்றும் நகோமி ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டனர் என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. நம்மை விடச் சிறியவர்களிடமிருந்தும் பெரியவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கிறது. அன்பான மற்றும் நம்பிக்கைக்குரிய தலைமுறை உறவுகளை வளர்க்க முற்படுவோம். அது நம்மையும் மற்றவர்களையும் ஆசீர்வதித்து, நாம் அறிந்திராததை கற்றுக்கொள்ள உதவும்.

 

தாழ்மையுள்ள ஜோர்ன்

குத்தகை நிலத்தில் விவசாயம் செய்யும் ஜான் இவ்வளவாய் உயர்வாரென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பார்வை குறைபாடும் இன்னும் பிற உடல் நலக்குறைகள் மத்தியிலும், அவர் நார்வேயில் உள்ள தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காகத் தன்னை அர்ப்பணித்தார். உடல் வேதனையின் காரணமாக தூங்க முடியாத இரவுகளில், அவர் ஜெபித்தார். ஜெபத்தில் ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து, ஒவ்வொரு நபரையும் பேர் பேராகச் சொல்லி, அவர் இதுவரை சந்திக்காத பிள்ளைகளுக்காகக் கூட ஜெபித்தார். ஜனங்கள் அவருடைய கண்ணியத்தைப் பெரிதும் நேசித்து, அவருடைய புத்தியையும் அறிவுரையையும் பெறுவார்கள். நடைமுறையில் அவர்களுக்கு உதவ இயலாவிட்டாலும், அவருடைய அன்பைப் பெற்று அவர்கள் செல்லுகையில் அவர்கள் இன்னும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணருவார்கள். ஜோர்ன் இறந்தபோது, அவருக்கு குடும்பம் இல்லாவிட்டாலும், அந்த வட்டாரத்திலேயே அவரது இறுதிச் சடங்கு வெகு விமர்சையாக இருந்தது. அவர் எண்ணியதைக் காட்டிலும் அவரது ஜெபம் மலர்ந்து மிகுந்த பலனைத் தந்தது.

இந்த தாழ்மையுள்ள மனிதர் அப்போஸ்தலன் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றினார். அவர் தனது சிறையிருப்பிலும் தன் மூலம் தேவனிடம் திரும்பினவர்களை நேசித்தார், அவர்களுக்காக ஜெபித்தார். அவர் ரோமாபுரியின் சிறையிலிருந்தபோது, எபேசுவில் உள்ளவர்களுக்குத் தேவன் “ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை” தரும்படிக்கும், அவர்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் (எபேசியர் 1:17-19) ஜெபித்தார். அவர்கள் இயேசுவை அறிந்து, ஆவியின் வல்லமையால் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்று ஏங்கினார்.

ஜானும் அப்போஸ்தலனாகிய பவுலும் தேவனிடம் தங்களை ஊற்றி, தாங்கள் நேசித்தவர்களுக்காக தங்களை அர்ப்பணித்து, ஜெபத்தில் தேவனுக்கு ஊழியம் செய்தனர். இன்று, நாம் பிறரை எவ்வாறு நேசிக்கிறோம், எப்படிச் சேவை செய்கிறோம் என்பதில் அவர்களுடைய உதாரணங்களைச் சிந்திப்போம். 

 

தேவனை குறித்த பிரமிப்பு

ஃபோபியா என்பது சில காரியங்கள் அல்லது சூழ்நிலைகளின் “எதேச்சையான பயம்” என வரையறுக்கப்படுகிறது. அராக்னோஃபோபியா என்பது சிலந்திகள் பற்றிய பயம் (இது பயப்படுவதற்கு முற்றிலும் சாதாரணமான பொதுவான விஷயம் என்று சிலர் சொல்லலாம்). பின்னர் குளோபோஃபோபியா (பலூன்கள் குறித்த பயம்) மற்றும் ஷாக்லெட்டோஃபோபியா (சாக்லேட் குறித்த பயம்) உள்ளது. இதுபோல சில நானூறு பயங்கள் உண்மையானவை மற்றும் ஆவணப்படுத்தப்பட்டவை. எதற்கு வேண்டுமானாலும் நாம் பயப்படக்கூடும் என்றே தோன்றுகிறது.

பத்து கட்டளைகளை பெற்றபின்னர், இஸ்ரவேலர்களின் பயம் குறித்து வேதாகமம் கூறுகிறது, “இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று” (யாத்திராகமம் 20:18). மோசேயோ அவர்களை இந்த சுவாரஸ்யமான வாக்கியங்களால் தேற்றினார்: “பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார்” (வ. 20). “பயப்படாதிருங்கள் ஆனால் பயந்திருங்கள்” என்று சொன்னதில் மோசே தனக்குத்தானே முரண்படுகிறார். உண்மையில், “பயம்” என்பதற்கு எபிரேய பாஷையில் குறைந்தபட்சம் இரண்டு அர்த்தங்கள் உள்ளன.எதைக் குறித்தாகிலும் நடுக்கமுண்டாகும் பயம் மற்றுதேவன் மீதுள்ள பயபக்தியான வியப்பு.

குளோபோஃபோபியா, ஷாக்லெட்டோஃபோபியா போன்ற பயங்கள் நமக்கு சிரிப்புண்டாக்கலாம். ஃபோபியாஸ் பற்றிய மிகவும் கவலைக்கிடமான அடிப்படை என்னவெனில், எல்லா வகையான விஷயங்களுக்கும் நாம் பயப்படக்கூடும். சிலந்திகளைப் போல நம் வாழ்வில் அச்சங்கள் ஊடுருவி, உலகம் ஒரு பயங்கரமான இடமாகத் தோன்றலாம். பயங்கள் மற்றும் அச்சங்களுடன் நாம் போராடும்போது, நம் தேவன் ஒரு வியத்தகு தேவன் என்பதை நினைவூட்டுவது நல்லது, இருளின் மத்தியில் இக்காலத்திற்கேற்ற அவருடைய ஆறுதலை நமக்களிக்கிறார்.